தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 7 ஜெர்மானியர்கள் கைது - அசாம் காவல்துறை

அஸ்ஸாமில் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறி மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா விசா விதிகளை மீறி மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 7 ஜெர்மானியர்கள் கைது
சுற்றுலா விசா விதிகளை மீறி மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 7 ஜெர்மானியர்கள் கைது

By

Published : Oct 30, 2022, 9:32 AM IST

திஸ்பூர்: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 7 பேர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காஜிரங்கா தேசிய பூங்காவிற்கு அக் 26ஆம் தேதி சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் கர்பி அங்லாங் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு சில மதம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

இவை அனைத்தும் சுற்றுலா விசாவின் விதிகளை மீறி நடந்ததுவருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 7 ஜெர்மானியர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜிபி சிங் கூறுகையில், “இது சுற்றுலா விசா விதிமுறைகளை மீறிய குற்றமாரும். உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா 500 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்தார். அக்டோபர் 27ஆம் தேதி விசா விதிமுறைகளை மீறியதாக வங்க தேசத்தைச் சேர்ந்த 17 பேர், ஸ்வீடனைச் சேர்ந்த 3 பேர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 7 பேர் என்று மொத்தம் 27 பேரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகன்

ABOUT THE AUTHOR

...view details