தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவல்துறையினரின் பேருந்து மோதி சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழப்பு! - சரக்கு வாகன ஓட்டுநர் பலி

புதுச்சேரி: டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த காவல்துறையினரின் பேருந்து, எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

police
police

By

Published : Dec 16, 2020, 3:21 PM IST

புதுச்சேரி காவல்துறையில் உள்ள ஐ.ஆர்.பி.என் பிரிவு காவலர்கள் 46 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக காவல்துறை பேருந்தில் இன்று (டிசம்பர் 16) காலை சென்றுகொண்டிருந்தனர்.

புதுச்சேரி அடுத்த அரியூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் சிவக்குமார்(27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த எட்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வில்லியனூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details