தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நூஹ் மதராஸா கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட் - 13 வயது சிறுவனே சக நண்பனை கொலை செய்தது அம்பலம்! - 13 வயது சிறுவனின் வாக்குமூலம்

மதராஸாவிலிருந்து 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

police
police

By

Published : Sep 12, 2022, 6:51 PM IST

நூஹ்(ஹரியானா): ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஷா சோகா மதராஸாவில் படித்து வந்த, சமீர் என்ற 11 வயது சிறுவன் கடந்த வாரம் மாயமானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி, மதராஸாவின் கீழ்த்தளத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, தோண்டி பார்த்தபோது, சமீர் அங்கு புதைக்கப்பட்டது தெரியவந்தது. சிறுவன் சமீரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்தக்கொலை சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதராஸாவில் சமீருடன் படித்த 13 வயது சிறுவன்தான், சமீரை கொலை செய்தான் எனத் தெரியவந்துள்ளது. மதராஸாவில் படிக்க விருப்பம் இல்லாத சிறுவன், மதராஸா குறித்து அவதூறாகப் பரப்பி, அதனை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளான்.

மேலும், சமீரும் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அதனால் மதராஸாவில் யாரும் இல்லாத நேரத்தில் சமீரை கீழ்த்தளத்திற்கு அழைத்துச்சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 13 வயது சிறுவனை கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பெற்றோர் அனைவரும் மதராஸாவிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பைக் வீலிங்... 3 இளைஞர்கள் கைது...

ABOUT THE AUTHOR

...view details