உத்தரகாண்ட்மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் வசித்து வருபவர், ப்ரீத்தி (32). இவரது கணவர் அனூப் மனநிலை சரியில்லாத நிலையில் உள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு ப்ரீத்தியின் மாமியார் சுபத்ரா மற்றும் ப்ரீத்தியின் நாத்தனார் ஜெயா ஆகியோர் ப்ரீத்தியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வரதட்சணை அதிகமாக கேட்டு ப்ரீத்தியின் தலையில் சூடான பாத்திரத்தால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் ப்ரீத்தியின் தாய் சரஸ்வதி தேவி, தனது மகளை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது முதலில் ப்ரீத்தியின் மாமியார் ப்ரீத்தியின் தாயை உள்ளே விட மறுத்துள்ளார்.