தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் நம்முடையதுதான்' - ராஜ்நாத் சிங் - கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம்தான் என்றும்; இதுதொடர்பான தீர்மானம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

By

Published : Jul 25, 2022, 11:57 AM IST

ஜம்மு-காஷ்மீர்: ஜம்முவில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 23) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்முவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிக்ழச்சியில் அவர் ஆற்றிய உரையின் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், காணொலியோடு,"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம்தான். இதுதொடர்பான தீர்மானம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அது எப்படி, பாபா அமர்நாத் (இந்து கடவுள் சிவனின் வடிவம்) நம்முடனும், சக்தி ஸ்வரூபமான மாதா சாரதா (இந்து கடவுள் சிவனின் மனைவி) எல்லைக்கு மறுபுறமும் இருக்க முடியும்?" என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் நேற்றைய நிகழ்வில் பேசியதாவது,"சட்டப்பிரிவு 370-யை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஒரு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. தீய நோக்கங்களுடன் செயல்படுபவர்களிடம் இருந்து இந்தியா தனது மக்களைப்பாதுகாக்கும் வகையில் நம்பிக்கை வாய்ந்த, வலிமையான நாடாக உருமாறியுள்ளது.

அரசின் சீரிய செயல்பாடுகளால், பாதுகாப்புத்துறை சார்ந்த தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் சிறந்த 25 நாடுகளின் பட்டியிலில் இந்தியா இணைந்துள்ளது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்

இதன்மூலம், உலகின் தலைசிறந்த ஏற்றுமதியாளர் என்ற பெருமையை அடையலாம். இந்தியாவை உலக அரங்கில் வலிமைமிக்க நாடாக மாற்றுவதே எங்களின் நோக்கம்" என்றார்.

போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களை நினைவுகூர்ந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வான் பள்ளதாக்கு சம்பவத்தில் உயிர்த்தியாகம் செய்து மூவர்ணக்கொடியை உயரப் பறக்க வைத்த காரணமான வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்திய - சீனப்படைகளுக்கு இடையே கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு

ABOUT THE AUTHOR

...view details