தானே (மகாராஷ்டிரா):ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில் ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் நடைபாதையில் குழந்தையை பிடித்தப்படி பெண் ஒருவர் நடந்துகொண்டிருந்தார். அந்த பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய குழந்தை, தவறுதலாக ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்தது.
தயாம்பகா கலையில் மாஸ்டரான கேரள பெண்
அதே நேரத்தில், புறநகர் ரயில் ஒன்று அந்த நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயார் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், குழந்தையை மீட்கமுடியாமல் திண்டாடியதாகக் கூறப்படுகிறது.
இவ்வேளையில் அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் ஓடிச்சென்று குழந்தையை தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருந்து நடைபாதையில் ஏற்றிவிட்டு, தானும் தப்பித்துக்கொண்டார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் இது தொடர்பான காணொலியை பகிர்ந்த இந்தியன் ரயில்வே, ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டை அதிகளவில் இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.