தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிமிக்கி கம்மல் புகழ் மலையாள பாடலாசிரியர் அனில் பனச்சூரான் காலமானார் - அனில் பனச்சூரான் மறைவு முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல்

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட மலையாளத்தின் மூத்தக் கவிஞர், பாடலாசிரியர் அனில் பனச்சூரான் காலமானார்.

Anil Panachooran
Anil Panachooran

By

Published : Jan 4, 2021, 11:32 AM IST

Updated : Jan 4, 2021, 12:58 PM IST

கேரளாவில் மிகப் புகழ்பெற்ற மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான அனில் பனச்சூரான் இன்று மாரடைப்பால் காலமானார். 51 வயதான இவர் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு மாயா என்ற மனைவியும், மைத்ரேயி மற்றும் அருண் என்ற குழந்தைகளும் உள்ளது. இவரது மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரபி கதா என்ற திரைப்படத்தில் உள்ள சோரா வீணா மண்ணில், கதாபரயும்போல் திரைப்படத்தில் பர்பாரன் பலானே என்ற பாடல்கள் மலையாளிகளின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என தனது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அரபி கதா என்ற திரைப்படத்தில் இவர் கம்யூனிச சிந்தனை சார்ந்து எழுதிய பாடல்கள் இவருக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற படத்தில் வந்து சமூக வலைதளம் மூலம் பரவி நாடு முழுவதும் சக்கைப் போடு போட்ட, ஜிமிக்கி கம்மல் பாடலை எழுதியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பி பார்க்கும் பாகிஸ்தான்!

Last Updated : Jan 4, 2021, 12:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details