உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் 14 வயது சிறுமியை கோயிலில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளான். இருவரும் திருமணத்தின்போது மைனர் என்ற நிலையில், வீட்டிற்கு தெரியாமல் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர்.
சிறுமியின் தந்தை அச்சிறுவனுக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்த நிலையில், அச்சிறுவன் தற்போது இளைஞனாகியுள்ளதால், அவனுக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையிடம் அச்சிறுவன் பிடிபட்ட நிலையில், அவனுக்கு அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறார்களுக்கு இடையேயான காதல் உணர்வை போக்ஸோ சட்டத்தின் கீழ் கொண்டுவர தேவையில்லை. சட்டத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் மனசாட்சியுடன் போக்ஸோ சட்டத்திலிருந்து சிறுவனை விடுவிக்கிறது. போக்ஸோ சட்டம் என்பது சிறார்களை பாதுகாக்கவே அல்லாமல் அவர்களை தண்டிக்க அல்ல.
மேலும், குழந்தை எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை முன்னெடுக்கிறது. இந்த வழக்கு குழந்தையின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீதிமன்றம் உணர்கிறது எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளைஞனுக்கு பிணை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடித் திருவிழா தெலங்கானாவில் தொடக்கம்