டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ரூ.42,750 நலத்திட்டங்களை தொடங்கிவைக்க ஜன.5ஆம் தேதியன்று பஞ்சாப் சென்றார். சாலை மார்க்கமாக காரில் அவர் பயணித்த நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன.
இது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தக் கோரி மூத்த வழக்குரைஞர் மனீந்தர் சிங் தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம் முறையிட்டார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (ஜன.7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு இன்று (வியாழக்கிழமை) நோட்டீஸ் வழங்கப்பட்டது.