தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பேசக்கூடாது என்றால் எதற்கு கூட்டம்...’ - பிரதமர் மோடிக்கு மம்தா சுளீர் கேள்வி! - பிரதமர் மோடி மம்தா பானர்ஜி மோதல்

பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்கப்படுவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மம்தா
மம்தா

By

Published : May 20, 2021, 6:46 PM IST

இந்தியாவில் நிலவும் கோவிட்-19 நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்கள், நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தக் கூட்டம் குறித்து விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் அனைத்தும் ’சூப்பர் பிளாப்’ ஆகவே உள்ளது. நான் உள்பட பெரும்பாலான மாநில முதலமைச்சர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது பெருத்த அவமதிப்பாகும். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது.

இது கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் செயல். இதுபோன்று ஏன் கூட்டத்தை நடத்தவேண்டும். அதில் பயன் என்ன? கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தவொரு முறையான திட்டமும் இல்லை" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

ABOUT THE AUTHOR

...view details