மும்பை: ஒன்றிய, மாநில அரசுகள் கோரிக்கையை ஏற்கும் வரை வணிகர்கள் ஜிஎஸ்டி செலுத்தக்கூடாது என பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தெரிவித்துள்ளார்.
உல்லாஸ்நகர் வணிக அமைப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், உங்கள் கோரிக்கையை சரியான முறையில் வைக்கவேண்டும். அப்படி வைத்தால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மட்டுமல்ல, பிரதமர் மோடியும் அதை காது கொடுத்து கேட்பார் என பேசினார்.
எங்களுடைய கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்க்கவே பிரஹலாத் மோடியை இந்தக் கூட்டத்துக்கு அழைத்தோம் என உல்லாஸ்நகர் வணிக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
உல்லாஸ்நகரை சேர்ந்த பல்வேறு வணிகர்கள் மீதும் கரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் போல மகாராஷ்டிராவும் இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆகஸ்டில் வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 9 நாள்கள் விடுமுறை