தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன்மோகன் சிங் சொன்னதை செய்து காட்டியிருக்கிறேன் - வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி - பிரதமர் மோடி

டெல்லி: வேளாண் சட்ட விவகாரத்தில் மன்மோகன் சிங் சொன்னதை செய்து காட்டியிருக்கிறேன் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Feb 8, 2021, 12:59 PM IST

விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், விவசாயிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசிய அவர், "முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்லக் கூடாது. இந்த சீர்திருத்தங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும்.

தங்களின் குறைகளை பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்க மீண்டும் வாய்ப்பளிக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். நாடாளுமன்றத்தில் இருந்து அழைப்பு விடுக்கிறேன். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்றார்.

பிரதமர் மோடி

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் எதிர்கட்சிகளை விமர்சித்து பேசிய அவர், "1971ஆம் ஆண்டு, சிறிய அளவிலான நிலங்களை உடைய விவசாயிகளின் எண்ணிக்கை 51 விழுக்காடாக இருந்தது. தற்போது 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 86 விழுக்காடு விவசாயிகள், 2 ஹெக்டேருக்கு குறைவான நிலங்களையே வைத்துள்ளனர். அதாவது 12 கோடி விவசாயிகள்.

இந்த விவசாயிகள் மீது நாட்டிற்கு எந்த பொறுப்பும் இல்லையா, விவசாயிகளின் விவகாரத்தில் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க செய்கிறது. ஆனால், வளர்ச்சிக்கு மாற்றம் தேவை என விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு பெரிய பொதுச் சந்தையை சாத்தியப்படுத்தும்போது வரும் அனைத்து தடைகளையும் நீக்குவதையே அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு சுதந்திரமான சந்தையை உருவாக்கித் தந்து இந்தியாவை பெரிய உலகளாவிய சந்தையாக மாற்ற வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். மன்மோகன் சிங் சொன்னதை இந்த மோடி செய்திருக்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details