டெல்லி: டெல்லியில் டிரைவரில்லா மெட்ரோ ரயில் தனது பயணத்தை டிச.28ஆம் தேதி தொடங்குகிறது.
டெல்லியில் டிரைவரில்லா மெட்ரோ ரயில் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பங்கெடுத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த முதல் பயணம் ஜானக்பூரி (மேற்கு)- பொட்டானிக்கல் கார்டன் வரை தொடர்கிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கு வழங்கப்படும் ரூபே கார்டுகள் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனிலும் பயணிக்க உதவும். இந்த வசதி 2022ஆம் ஆண்டுக்குள் டெல்லியிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிடைக்கும்.
இந்தக் கண்டுபிடிப்புகள் மற்றும் பயணம் புதிய சகாப்தத்தை உருவாக்கும். டிரைவர் இல்லாத ரயில்கள் முழுவதும் தானியங்கி முறையில் இயக்கப்படுகின்றன. இவைகள் மனித தவறை நீக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்'- சாம்னா