கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 20 நாள்களாக உச்சத்தைத் தொட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கரோனா அச்சம்: தொடர் ஆலோசனையில் பிரதமர் மோடி! - கரோனா தடுப்பூசி
டெல்லி: கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகிவரும் நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மோடி
இன்று, மாலை 6 மணி அளவில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டுத் தடுப்பூசி தயாரிப்பாளர்களும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று தொடர் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.