கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், விஞ்ஞான் பாரதி சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது.
மக்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டவும், அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்ற உத்தியைக் கட்டமைப்பதும், இவ்விழாவின் நோக்கமாகும்.
இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, ஆறாவது இந்தியா சர்வதேச அறிவியல் விழா டிசம்பர் 22 முதல் 25 வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.22) பிற்பகல் 4.30 மணிக்குக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்கின்றார்.