தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய ஆயுஷ் நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி - National Institute of Unani Medicine

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11ஆம் தேதி கோவா, காசியாபாத், டெல்லியில் உள்ள 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தேசிய ஆயுஷ் நிறுவனங்களை நாட்டுக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஆயுஷ் நிறுவனங்களை நாட்டுக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

By

Published : Dec 6, 2022, 8:23 PM IST

கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத்தில் உள்ள தேசிய யுனானி மருந்து நிறுவனம், டெல்லியில் உள்ள தேசிய ஓமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். இந்த நிறுவனங்களும் ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆயுஷ் சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெரும் சமுதாயத்திற்கு கிடைக்க செய்தல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த சர்பானந்த சோனோவால், இந்த நிறுவனங்கள் ஆயுஷ் மருத்துவ முறைகளை உலக அளவுக்கு எடுத்துச்செல்லும். பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். பாரம்பரிய மருத்துவமுறையில் ஆராய்ச்சி மேம்பாடு, மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்கிற்கு இணங்க இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றில் 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், பட்டம், முதுநிலைப்பட்டம், மருத்துவப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு 400 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இந்த 3 நிறுவனங்களிலும் 550 கூடுதல் படுக்கைகளும் உருவாக்கப்படும். கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் உயர்தர வசதிகளை கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் வழங்குவர்.

இது மருத்துவ மதிப்பு பயணத்தை மேம்படுத்தும் வகையில் நலவாழ்வு மையமாக உருவாக்கப்படும். மேலும் சர்வதேச மற்றும் தேசிய ஒத்துழைப்புடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கான மாதிரி மையமாகவும் இது செயல்படும். டெல்லியில் உள்ள தேசிய ஓமியோபதி நிறுவனம் வடஇந்தியாவில் உருவாக்கப்படும் முதலாவது ஓமியோபதி முறை மருத்துவ நிறுவனமாக அமையும். இது நவீன மருந்துகளுடன் கூடிய ஆயுஷ் சுகாதார சேவைகளை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் அமையும் தேசிய யுனானி மருந்து நிறுவனம் பெங்களூருவில் உள்ள தேசிய யுனானி மருந்து நிறுவனத்தின் துணை மையமாக இருக்கும். இது வட இந்தியாவில் முதல் நிறுவனமாக தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களின் நோயாளிகளுக்கும், வெளிநாட்டு நோயாளிகளுக்கும் எம்விடி மூலம் சிகிச்சை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை போல் முடிவுகள் இருக்காது, காங்கிரஸ் நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details