டெல்லி:பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டைச் சவால்களை எதிர்கொள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலால் சிறப்பு பண்புகளைக் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட 35 பயிர் வகைகளை இன்று(செப். 28) பிரதமர் மோடி காணொலி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய இத்திட்டம் மத்திய, மாநில வேளாண்ப் பல்கலைக்கழகங்கள் மூலமாக அறிமுகப்படுத்ததப்பட உள்ளது.