டெல்லி: கோவிட் இரண்டாம் கட்ட பரவலின்போது நாடு முழுக்க ஆக்ஸிஜன் தேவை கணிசமாக அதிகரித்தது. பல இடங்களில் ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதற்கிடையில் வருகிற செப்டம்பரில் கோவிட் மூன்றாம் கட்ட பரவல் இருக்கும் என்று எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் எச்சரித்துவருகின்றனர்.
ஆகவே, இது குறித்தும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடும். மேலும் சாலை போக்குவரத்து, விமானம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளின் பணிகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக கடந்த ஒரு வாரமாக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு அமைச்சக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.