தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக சுற்றுச்சூழல் தினம்: எத்தனால் கலப்புக்கான எதிர்காலத் திட்டத்தை வெளியிடும் பிரதமர் மோடி! - ethanol blending in India

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வழியாக உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Jun 5, 2021, 8:32 AM IST

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று(ஜுன் 5) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி காலை 11 மணிக்கு காணொலி காட்சி வழியே உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

சிறந்த சுற்றுச்சூழலுக்காக உயிரி - எரிபொருள்களை ஊக்குவித்தல், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக கொள்ளப்பட்டுள்ளது.

எத்தனால் கலப்புக்கான எதிர்காலத் திட்டம்

இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் எத்தனால் கலப்புக்கான எதிர்காலத் திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில், விரைவில் பெட்ரோலில் 20 விழுக்காடு வரை எத்தனாலை கலந்து விற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அறிவுறுத்தும் ஈ-20 அறிவிப்பையும், உயர் ரக எத்தனால் கலப்புகளான ஈ12 மற்றும் ஈ15-க்கான பிஐஎஸ் விவரக்குறிப்புகளையும் வெளியிடவுள்ளது.

பிரதமர் மோடி ட்வீட்

இந்த முயற்சிகளின் மூலம் கூடுதல் எத்தனால் வடிகட்டல் வசதிகள் நிறுவப்படுவதோடு, கலப்பு எரிபொருளை நாடு முழுவதும் கிடைக்க செய்வதற்கான கால அளவுகளும் வழங்கப்படும். இதனால் எத்தனால் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 2025-க்கு முன்பாக எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும்.

அதேபோல, புனேவில் மூன்று இடங்களில் ஈ100 மையங்களுக்கான சோதனை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு திட்டங்களை செயல்படுத்துபவர்களாக விளங்கும் விவசாயிகளின் அனுபவம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details