தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை

பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி பங்கேற்று இன்று உரை நிகழ்த்துகிறார்.

Narendra Modi Narendra Modi Pandit Deendayal Petroleum University 8th convocation Modi to address convocation நரேந்திர மோடி பட்டமளிப்பு விழா பண்டிட் தீனதயாள் உபாத்யாயா
Narendra Narendra Modi Pandit Deendayal Petroleum University 8th convocation Modi to address convocation நரேந்திர மோடி பட்டமளிப்பு விழா பண்டிட் தீனதயாள் உபாத்யாயா Modi

By

Published : Nov 21, 2020, 9:33 AM IST

Updated : Nov 21, 2020, 9:49 AM IST

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வின்போது, 45 மெகா வாட் சூரிய மின் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், 2600 மாணவர்களுக்கு பட்டம்/ பட்டய படிப்பு சான்றிதழ் அளிக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில அரசால், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.

இங்கு, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: பூட்டானில் 2ஆம் கட்டமாக ரூபே கார்டு அறிமுகம்

Last Updated : Nov 21, 2020, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details