புதுடெல்லி: முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், " வறுமை பற்றிய உலக வங்கியின் தரவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். கரோனா காலத்தில் உலக அளவில் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றவர்கள் எண்ணிக்கை 13.1 கோடி. இந்தியாவில் 7.5 கோடி பேர். மொத்தத்தில் இது 57. 3 விழுக்காடு ஆகும்.
பிரதமர் தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும் - ராகுல் ட்வீட் - உலக வறுமை
பிரதமர் மோடி தவறுகளை ஒப்புக் கொண்டு, இந்தியாவை சீரமைக்க வல்லுநர்களின் உதவியை நாட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும்
இது மத்திய அரசின் தவறான நிர்வாகத்தை காட்டுகிறது. பிரதமர் மோடி தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, வல்லுநர்களின் உதவியை பெற்றால் தான் வருங்காலங்களில் நாட்டை சீரமைக்க முடியும். எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டே இருப்பதால் எவ்வித தீர்வும் கிடைக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதன்முறையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகளுடன் பறந்த விமானம்