தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்த் தாத்தாவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் - pm modi tweet Swaminatha Iyer

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Slug PM remembers Tamil Thatha Swaminatha Iyer on his birth anniversary
Slug PM remembers Tamil Thatha Swaminatha Iyer on his birth anniversary

By

Published : Feb 20, 2022, 1:45 AM IST

டெல்லி: தமிழ்நாடு முழுவதும் நேற்று(பிப்.19) தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சாமிநாத ஐயருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்வீட்டில், "தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர். இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நாடு முழுவதும் 100 கிசான் ட்ரோன் திட்டம் - தொடங்கி வைத்த பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details