தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி ஆயோக்: மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - NITI Aayog news

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (பிப். 20) நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பிரதமர் மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

6ஆவது நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமை!
6ஆவது நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமை!6ஆவது நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமை!

By

Published : Feb 20, 2021, 10:52 AM IST

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக இயங்கிவந்த திட்டக்குழு 2014ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு கொண்டுவரப்பட்டது. இந்த அமைப்பே தற்போது அரசின் கொள்கைகளை வகுக்கும் அமைப்பாக இயங்கிவருகிறது.

அதன்படி நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (பிப். 20) நடைபெற்றுவருகிறது. இதில், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,சில மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்கியுள்ளார். கூட்டத்தில் வேளாண்மை, உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டுள்ளார். மேலும், கூட்டத்தில், புதிதாக யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்ற லடாக்கின் துணைநிலை ஆளுநர் முதன்முறையாக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் குறித்து கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details