தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசியில் இரண்டு கிராமங்களைத் தத்தெடுக்கும் பிரதமர் மோடி! - கரோனா தொற்று

டெல்லி: ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் வாரணாசியில் இரண்டு கிராமங்களைப் பிரதமர் மோடி தத்தெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

PM Narendra Modi
பிரதமர் மோடி

By

Published : Feb 15, 2021, 7:48 PM IST

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், இரண்டு கிராமங்களை அவர் தத்தெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே தொகுதியில் ஜெயபூர், நாக்பூர், கக்ராஹியா, டோமாரி கிராமங்களைப் பிரதமர் மோடி தத்தெடுத்திருந்தார். கடந்தாண்டு, கரோனா தொற்று காரணமாக எந்தவொரு கிராமங்களும் தத்தெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் பியார்பூர், பர்ஹாம்பூர் ஆகிய கிராமங்களை விரைவில் மோடி தத்தெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதம் பிரதமர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:பொது மக்களிடம் கொள்ளை - எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details