டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்து உள்ள நாட்டு மக்களுக்கு தாம் என்றும் நன்றி உணர்வு உள்ளவராக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த வலியுறுத்திய கடவுகளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதானது அல்ல என்றும்; மாறாக எதிர்க்கட்சிகளுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்றும்; அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டும் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதாகவும், எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.