தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடவுளாக திகழ்கிறார் பிர்சா முண்டா - பிரதமர் மோடி புகழாரம் - பிர்சா முன்டா குறித்து பிரதமர் மோடி

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா (Birsa Munda) நாட்டு மக்களின் உணர்வில் கடவுளாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

PM Narendra Modi
PM Narendra Modi

By

Published : Nov 15, 2021, 7:19 PM IST

Updated : Nov 15, 2021, 7:50 PM IST

விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடிய இன தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளான இன்று, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்சாவின் அருங்காட்சியகத்தை (Birsa Munda museum) பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்.

இந்த விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ், முதலமைச்சர் ஹேமந்த் சோரேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டு காலத்தில், நாட்டின் பழங்குடியினர் பாரம்பரியத்திற்கும் அதன் வீரம் செறிந்த வரலாறுகளுக்கும் மகத்தான அடையாளத்தை, கூடுதல் அர்த்தத்தை வழங்க நாடு முடிவு செய்துள்ளது.

பழங்குடிகளுக்கு கௌரவம்

இதற்காக இன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 அன்று, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் ‘பழங்குடியினர் கௌரவ தினமாக’ (Janjatiya Gaurav Diwas) நாடு கொண்டாடும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலமாக உருவாகுவதற்கு உறுதியான எண்ணம் கொண்டிருந்தவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். மத்திய அரசில் பழங்குடியினர் நலனுக்கு முதன் முறையாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய வாஜ்பாய், நாட்டின் கொள்கைகளுடன் பழங்குடியினர் நலன்களை இணைத்தவர்.

நமது பழங்குடியினர் கலாசாரத்தின் பன்முகத்தன்மையையும், விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின வீரர்கள், வீராங்கனைகளின் பங்களிப்பையும் சித்தரிப்பதற்கு இந்த அருங்காட்சியகம் உயிர்ப்பான களமாக மாறும்.

பிர்சா நமது கடவுள்

பன்முகத்தன்மையை, தொன்மை அடையாளத்தை, இயற்கையைப் பாழ்படுத்துவது சமூகத்தின் நலனுக்கான பாதையாக இருக்காது என்பதை பகவான் பிர்சா முண்டா அறிந்திருந்தார். அதே சமயம் நவீன கல்விக்கு ஆதரவளித்த அவர், தமது சொந்த சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் போதாமைகளுக்கு எதிராகப் பேசும் துணிவையும் கொண்டிருந்தார்.

பகவான் பிர்சா இந்த சமூகத்திற்காக வாழ்ந்தார், தமது கலாசாரத்திற்காகவும், தமது நாட்டிற்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். எனவே நமது சமயத்தில், நமது உணர்வில், நமது கடவுளாக இப்போதும் அவர் திகழ்கிறார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் படிங்க:கை ரிக்சா இழுப்பவருக்கு ரூ.1 கோடி வீட்டை எழுதிக் கொடுத்த மூதாட்டி!

Last Updated : Nov 15, 2021, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details