மாணவர்கள் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து, 'பரிக்ஷா பே சர்சா' என்ற தலைப்பில் இன்று (ஏப்.7) மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதில், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது, “கோவிட்-19 பரவல் காரணமாக மாணவர்களை நேரில் சந்திக்க முடியததால், காணொலி வாயிலாக சந்திக்கிறேன். மாணவர்கள் அச்ச உணர்வோடு தேர்வை அணுக வேண்டாம்.
மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்கும் முறையான கவனத்தை செலுத்துவது அவசியம்.