தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2021, 6:39 AM IST

ETV Bharat / bharat

பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: ஆன்லைன் மூலம் மாணவர்களைப் சந்திக்கும் பிரதமர் மோடி!

டெல்லி: தேர்வுகள் பற்றிய கலந்துரையாடலான பரிக்‌ஷா பே சார்ச்சா 2021இல் ஆன்லைன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களைச் சந்திக்கிறார்.

பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: ஆன்லைன் மூலம் மாணவர்களைப் சந்திக்கும் பிரதமர் மோடி!
பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: ஆன்லைன் மூலம் மாணவர்களைப் சந்திக்கும் பிரதமர் மோடி!

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடிவருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். நான்காவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

வழக்கமாக இதற்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றிபெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அது சம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.

இந்நிலையில், இது குறித்தான அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இந்தாண்டு தேர்வு குறித்த அழுத்தம், பதற்றத்தைப் போக்கும்வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக கலந்துரையாட உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கான பதிவு நேற்றுமுதல் (பிப். 18) வரும் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழல்: துணைநிலை ஆளுநர் பதவியேற்கிறார் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details