மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிரதமர் மோடியின் தாயார்! - ஹீராபென் மோடி
டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த வரிசையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு குஜராஜ் மாநிலம் காந்திநகரில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. "எனது தாயார் இன்று கரோனா தடுப்பூசி போட்டு கொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். அதேபோல், உங்களுக்கு தெரிந்த வாய்ப்பு வழங்கப்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள உதவுங்கள்" என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசு சுகாதார மையங்களில் இலவசமாகவும், தனியார் மையங்களில் ஒரு டோஸ் 250 ரூபாய்க்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கிறது. தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டு 54 நாள்கள் கடந்த நிலையில், இதுவரை, 13,17,357 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10,30,243 பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.