தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக தலைவர்களை மிஞ்சிய மோடி... மக்கள் ஆதரவில் டாப்!

உலக தலைவர்களில் அதிக மக்கள் ஆதரவு கொண்ட தலைவராகப் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Sep 5, 2021, 1:03 PM IST

உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் மக்கள் ஆதரவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில். பிரதமர் மோடி அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு மக்களிடம் எந்தளவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது என்பதைக் கண்டறிய, வாரந்தோறும் சர்வே நடத்தும்.

டாப்பில் மோடி

அதன்படி, செப்டம்பர் 2ஆம் தேதி வெளியான ஆய்வு முடிவுகளில், மோடி 70 விழுக்காடு மக்கள் ஆதரவைப் பெற்று பிரபலமானவராகத் திகழ்கிறார். ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு 25 விழுக்காடு மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

உலக தலைவர்களை மிஞ்சிய மோடி

மக்கள் ஆதரவு அதிகம் பட்டியல்

  • இந்திய பிரதமர் மோடி - 70%
  • மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் - 64%
  • இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகி - 63%
  • ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் - 52%
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - 48%
  • ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் - 48%
  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - 45%
  • பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ - 39%
  • தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் - 38%
  • ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் - 35%
  • பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் - 34%
  • ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா - 25%

அதே போல், மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தோரின் விழுக்காடும் 25ஆகக் குறைந்துள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலிலும், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 75 விழுக்காடு பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மோடி ஆதரவு அதிகரித்தது எப்படி?

2019 ஆகஸ்ட் மாதம் மோடியின் மக்கள் ஆதரவு 82 விழுக்காடாக இருந்தது. அதன்பின், இந்தாண்டு ஜூன் மாதம் 66 விழுக்காடாகக் குறைந்தது.

கடந்த சில மாதங்களாக் கரோனா தொற்று பாதிப்பைத் திறம்படக் கையாண்டதன் காரணமாக, தற்போது அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details