புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அமைச்சரவை இன்று (ஜூன்.27) பதவியேற்றுக் கொண்டது.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “புதுச்சேரியில் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
இந்த அமைச்சர்கள் குழு, முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, அற்புதமான புதுச்சேரி மக்களின் லட்சியங்களை நிறைவேற்றட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பாஜக சார்பில் 2 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்குப்பின்னர் பெண் ஒருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி அமைச்சரவை: பெருமையும் வேதனையும்!