தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: சூறாவளிப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி! - Gujarat Election second phase of polls

குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார்.

குஜராத் தேர்தல்: சூறாவளிப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!
குஜராத் தேர்தல்: சூறாவளிப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

By

Published : Dec 2, 2022, 9:39 AM IST

குஜராத் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (டிச.1) நடைபெற்றது. தொடர்ந்து டிசம்பர் 5ஆம் நாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர்கள், குஜராத்தை ஆக்கிரமித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (டிச.2), நான்கு இடங்களில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதன்படி, வடக்கு குஜராத்தில் உள்ள ஜஞ்சவதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். காலை 11 மணிக்கு பனஸ்கந்தாவில் உள்ள கான்கெர்கேயில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அதன் பிறகு படான் சென்றடையும் பிரதமர் மோடி, வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு ஆனந்தில் உள்ள சோஜித்ராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பின்னர் மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இத்துடன் இங்கு சாலை மார்க்கமாகவே 14 தொகுதிகளுக்குமான பிரச்சாரததை மோடி மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க:ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்!

ABOUT THE AUTHOR

...view details