கெய்ரோ (எகிப்து): இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக, பாரத பிரமர் மோடி எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு முதலாம் உலகப் போரின் போது, எகிப்து மற்றும் பாலஸ்தீனம் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வீர மரணமடைந்த ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களுக்கான நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கெய்ரோ நகரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அல்-ஹகீம் மசூதியையும் பார்வையிட்டார்.
ஹெலியோபோலிஸ் (ஏடன்) பகுதியில் உள்ள நினைவுச்சின்னம், முதல் உலகப் போரின்போது ஏடனுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த 600 மேற்பட்ட காமன்வெல்த் படைவீரர்களின் நினைவாக எழுப்பப் பட்டுள்ளது. இந்த இடத்தை காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையம் பராமரித்து வருகிறது. காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தின் வலைத்தளத்தில் உள்ள தகவலின் படி, இந்த நினைவிடத்தில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற, மற்ற நாட்டுக்களை சார்ந்த 1,700க்கும் மேற்பட்ட காமன்வெல்த் படைவீரர்களுக்கும், இந்த போர் கல்லறை நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.
இதையும் படிங்க:Sundar Pichai: குஜராத்தில் கூகுளின் குளோபல் ஃபின்டெக் மையம் - சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு!
1926 ஆம் ஆண்டு , சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில், சர் ஜான் பர்னெட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இந்த நினைவகம் திறக்கப்பட்டது. 1967-1973 காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது, இந்த இடம் இடிக்கப்பட்டுள்ளது. பின் 1980ஆம் ஆண்டு காமன்வெல்த் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் பெயர்களைப் பதித்து, புதிய நினைவகத்தை நிறுவப்பட்டது. இந்த நினைவகத்தை, அப்போதைய எகிப்து நாட்டின் இந்தியத் தூதரால் திறக்கப்பட்டது.
முன்னதாக, கெய்ரோவில் உள்ள எகிப்தின் 11 நூற்றாண்டு காலகட்டத்தைச் சார்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க அல்-ஹகீம் மசூதியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி. அந்த மசூதியில் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த மறுசீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டார். இந்த மசூதி, இந்தியாவில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அல்-ஹகீம் மசூதி, ஃபாத்திமா கலீபகத்தின் 16வது கலீஃபா (தலைவர்) அல்-ஹகீம் பிஅம்ர் அல்லாஹ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மசூதி இந்தியாவைச் சார்ந்த தாவூதி போஹ்ரா சமூகத்தினரால் மதம் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியமான ஒரு தளமாக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க:"திருடுபோன கலைப் பொருட்களை திருப்பிக் கொடுக்க அமெரிக்கா திட்டம்" - பிரதமர் மோடி!