நிவர் புயல் நாளை (நவம்பர் 25) கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிவர் புயல்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் பிரதமர் மோடி ஆலோசனை! - pm modi video conference with puducherry cm
புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, இன்று (நவம்பர் 24) சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரோனா நோய்த்தொற்று விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஷ்வின் குமார், வளர்ச்சி ஆணையர் மற்றும் முதலமைச்சரின் செயலர் கலந்து கொண்டனர்.