தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சரின் கடிதத்தை விவசாயிகள் படிக்கவேண்டும்- பிரதமர்! - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தி கண்ணியமான உரையாடலுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PM Modi urges protesting farmers to read Tomar's letter, Shah shares it on social media
PM Modi urges protesting farmers to read Tomar's letter, Shah shares it on social media

By

Published : Dec 18, 2020, 10:41 AM IST

டெல்லி:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 20 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் பாஜக அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனிற்காக முன்னெடுத்த நடவடிக்கைகளையும், அதற்காக கிடைத்த பலன்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, வேளாண் சட்டங்கள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப் பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து முற்றிலும் பொய்யான கருத்துகள் விவசாயிகள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி என்றும் விவசாயிகளுடன் துணை நிற்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் நரேந்திர சிங் தோமரை வாழ்த்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய வேளாண் அமைச்சர் தோமர் விவசாயி சகோதர சகோதரிகளுக்கு ஒரு கடிதம் எழுதி, கண்ணியமான உரையாடலை நடத்த முயன்றுள்ளார். இதன் மூலம் அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். போராட்டத்தில் பங்களிக்கும் அனைவரும் இந்தக் கடிதத்தைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கடிதம் முடிந்தவரை அதிக மக்களைச் சென்றடைய ஆவன செய்யுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்

தொடர்ந்து அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி ஒருவரால் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை நிறைவேற்ற முடியும். நாட்டில் 60 ஆண்டுகளாக உங்கள் உரிமைகளை கொள்ளையடித்தவர்கள் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள்" எனவும், காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விவசாயிகளிடையே உரையாற்றும் மோடி!

ABOUT THE AUTHOR

...view details