சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இளைஞர்களிடையே வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது.
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக அனைவரும் யோகா பயிற்சி செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.