ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காஷ்மீர் துலிப் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் தற்போது துலிப் மலர்கள் சீசன் தொடங்கியுள்ளதால், அங்குள்ள துலிப் தோட்டம் நாளை மக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
துலிப் திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த மோடி - tulip function
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாளை (மார்ச்.25) துலிப் விழாவில் கலந்துகொள்ள வருமாறு பார்வையாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
![துலிப் திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த மோடி மோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11138005-192-11138005-1616573452580.jpg)
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஜம்மு காஷ்மீருக்கு நாளை (மார்ச்.25) சிறப்பான நாள். ஜபர்வான் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள துலிப் தோட்டம், மக்களின் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது. இந்தத் தோட்டத்தில், 64க்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பூக்கள் உள்ளன .
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜம்மு காஷ்மீருக்குச் சென்று அழகிய துலிப் தோட்டத்தைக் காணுங்கள். டூலிப்ஸைத் தவிர, ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பையும் நீங்கள் பெறுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.