டெல்லி: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கும், 15ஆம் தேதிக்கும் இடையே உங்களின் வீடுகளில் மூவண்ணக்கொடியை ஏற்றுங்கள். காட்சிப்படுத்துங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும்.
இன்றைய தினம் நமது வரலாற்றில் தனிச்சிறப்பு உடையதாகும். 1947ஆம் ஆண்டு இதே நாளில் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவண்ணக்கொடியோடு தொடர்புடைய குழுக்களின் விவரங்கள் முதல் முதலாவது மூவண்ணக்கொடியை பண்டித நேரு பறக்கவிட்டது வரை வரலாற்றின் சுவாரஸ்யமான தகவல்களை கீழே பகிர்ந்துள்ளேன்.