நாட்டில் ஜன் ஔசதி தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, "மருந்துகளின் விலை அதிகமாக இருக்கும் சூழலில் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஜன் ஔசதி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழைகளின் 9,000 கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய பலரும் மருந்துகள் பெறத் தொடங்கியுள்ளனர். எனவே, ஜன் ஔசதி மருந்தகங்களை ஏழை, எளியவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் தெரிவித்தார்.