தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலை திறப்பு!

குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

PM Modi
PM Modi

By

Published : Apr 16, 2022, 12:26 PM IST

புது டெல்லி : ஸ்ரீ ராம தூதன் ஹனுமன் ஜெயந்தி இன்று (ஏப்.16) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குஜராத் மாநிலம் மோர்பில் உள்ள பாபு கேசவானந்த் ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டிருந்த 108 அடி உயர ஹனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்தார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ஹனுமனின் பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். அனைவரின் வாழ்வும் புத்திசாலித்தனம், வலிமை மற்றும் அறிவு மிகுந்ததாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “இன்று அனுமன் ஜெயந்தி. மோர்பியில் ஹனுமன் சிலையை காணொலி மூலமாக திறந்துவைக்கிறேன். இதற்காக பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :Hanuman Jayanti 2022: அனுமன் ஜெயந்தி மணற்சிற்பம்!

ABOUT THE AUTHOR

...view details