ஜம்மு காஷ்மீரில் உள்ள துலிப் மலர் தோட்டம் சுற்றுலாப் பயணிகளுக்காக மார்ச் 25ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள துலிப் மலர் தோட்டம் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது எனப் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
கம்பீரம் நிறைந்த ஜம்மு காஷ்மீர் மலர் தோட்டம் - பிரதமர் மோடி ட்வீட் - ஜம்மு காஷ்மீர்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள துலிப் மலர் தோட்டம் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
![கம்பீரம் நிறைந்த ஜம்மு காஷ்மீர் மலர் தோட்டம் - பிரதமர் மோடி ட்வீட் மோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11139006-322-11139006-1616579017622.jpg)
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நாளை (மார்ச் 25) ஜம்மு காஷ்மீருக்கு முக்கியமான நாள். ஜபர்வான் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கம்பீரமான துலிப் மலர் தோட்டம் திறக்கப்படவுள்ளது.
அத்தோட்டத்தில், 64 வகைகளுக்கு மேலான 15 லட்சம் பூக்கள் மலர காத்துக்கொண்டிருக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மக்களுக்குப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசு முயற்சி மேற்கொண்டுவருகின்றது. துலிப் தோட்டம் குறித்த அசத்தலான காணொலியை ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.