இந்தியத் திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் "சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
'தலைவா' - ரஜினியை வாழ்த்தி ரசிகனாக மாறிய பிரதமர் மோடி!
தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி ட்வீட்
இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "வயது வித்தியாசமின்றி அனைத்துத் தலைமுறையினரையும் தனது நடிப்பால் கவர்ந்தவர் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ரஜினிக்கு அவரது ரசிகர்களும், திரைத் துறையினரும், முக்கியப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.