நடிகர் விவேக் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், "பிரபல நடிகர் விவேக்கின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல் - Prime Minister Modi pays tribute to Vivek
மறைந்த சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
'நகைச்சுவையுடன் அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - மோடி இரங்கல்
நகைச்சுவையுடன் அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர். திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சூற்றுச்சூழல், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர் விவேக். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர் இன்று சோகத்தில் ஆழ்த்திவிட்டார்’ - ஈபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்