தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை - பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடத் தேவையான மனித வளங்கள் உள்ளனவா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi
PM Modi

By

Published : May 2, 2021, 2:36 PM IST

நாடு முழுக்க கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

இந்நிலையில், கரோனாவுக்கு எதிராகப் போராடத் தேவையான மனிதவளங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும், அதை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்தாலோசிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பரிசோதனை செய்துகொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே அதைக் களைவதில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என நம்பப்படுகிறது.

முந்தைய கூட்டத்தில், இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனைகளைத் திறந்ததையும், ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் குடிமக்களுக்கு ஆதரவு அளிப்பதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

இதையும் படிங்க: கரோனாவால் 165 பத்திரிகையாளர்கள் மரணம்: ராகுல் கவலை

ABOUT THE AUTHOR

...view details