தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை! - கரோனா

கோவிட் நிலவரம் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆக.11) ஆலோசனை நடத்துகிறார்.

Corona
Corona

By

Published : Aug 10, 2021, 6:36 PM IST

Updated : Aug 10, 2021, 6:42 PM IST

டெல்லி: கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக.11) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக அங்கு அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று குறித்து வடகிழக்கு மாநிலங்களின் உள்துறை அலுவலர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா உரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இந்த மாத தொடக்கத்தில், கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததையடுத்து, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு பலதரப்பட்ட நிபுணர் குழுக்களை அனுப்பியது.

நாட்டில் தற்போது 80 சதவீத கோவிட் -19 பாதிப்புகள் அங்குள்ள 90 மாவட்டங்களில் இருந்து காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும் தமிழ்நாடு மறைமுகமாகவும் தாக்கப்படுகிறது- ராகுல் காந்தி

Last Updated : Aug 10, 2021, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details