சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பகவத் கீதை 18 அத்தியாயங்களையும் 700 ஸ்லோகங்களையும் கொண்டது. இந்த அத்தியாயங்களில் 6 அத்தியாயங்கள் மனித வாழ்வியலையும், அதிலிருக்கும் குழப்பங்களைப் பற்றியும் கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்கள் இறைவன் பற்றி கூறுகின்றன.
இந்த ஸ்லோகங்களுக்கு 21 அறிஞர்கள் எழுதிய விளக்கவுரைகள் அடங்கிய 11 கையெழுத்து பிரதிகளை பிரதமர் மோடி மார்ச் 9ஆம் தேதி வெளியிடுகிறார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் இந்து இறையியல் அறிஞரான மூத்தக் காங்கிரஸ் தலைவர் கரண் சிங் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.