தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜி 7 உச்சி மாநாடு: மெய்நிகர் வாயிலாகப் பங்கேற்கும் பிரதமர் மோடி!

ஜி-7 உச்ச மாநாட்டில் வரும் 12,13 ஆகிய தேதிகளில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Jun 10, 2021, 9:44 PM IST

பிரிட்டனில், ஜி-7 நாடுகள் உச்ச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவிட்-19 தொற்று காரணமாக, இந்த உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்கவில்லை. இருப்பினும், மரியாதை நிமித்தமாக அழைப்பை ஏற்று ஜூன் 12,13 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாகப் பங்கேற்பார்" என்றார்.

'Build Back Better' என்ற மைய நோக்க முழக்கத்துடன் இந்தாண்டு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கால நிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:’பிரதமர் மோடிதான் டாப் தலைவர்’ - சிவசேனா சஞ்சய் ராவத்

ABOUT THE AUTHOR

...view details