தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய விமானப்படைக்கு 56 சி-295 MW போக்குவரத்து விமானங்கள்... பிரதமர் மோடி அடிக்கல்... - வடோடரா

இந்திய விமானப்படைக்கு ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் டாடா கூட்டாண்மையுடன் 56 சி-295 எம்டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

குஜராத்தில் சி-295 விமான தயாரிப்பு தளத்தை அடிக்கல் நடும் மோடி
குஜராத்தில் சி-295 விமான தயாரிப்பு தளத்தை அடிக்கல் நடும் மோடி

By

Published : Oct 30, 2022, 11:49 AM IST

குஜராத்:தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டு விமானத் தயாரிப்புக்கு வலுவூட்டும் வகையில் இந்திய விமானப்படைக்கான போக்குவரத்து விமானத் தயாரிப்புத் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (அக்டோபர் 30) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ, ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56 சி-295 எம்டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்கு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் ஒப்பந்தப்படி, பறக்கும் நிலையில் 16 விமானங்கள் தயாரிக்கப்பட்டு பெறப்படும் என்று தெரிவித்தார்.எஞ்சிய 40 விமானங்கள் இந்திய விமான தயாரிப்பாளர், டாடா மற்றும் டிசிஎஸ் கூட்டாண்மை மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனம் மூலம் முதல் முறையாக ராணுவ விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறினார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.21,935 கோடியாகும் என்றும் இந்த விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பறக்கும் நிலையிலான முதல் 16 விமானங்கள் செப்டம்பர் 2023ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2025 ஆண்டுக்குள் கிடைக்கப்பெறும். இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவது விமானம் செப்டம்பர் 2026ஆம் ஆண்டு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 7 ஜெர்மானியர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details