பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுடன் இன்று(மே.21) காலை 11 மணியளவில் காணொளி(வீடியோ கான்ஃபரன்சிங்) மூலம் கலந்துரையாடுகிறார்.
வாரணாசியில் அதிகரிக்கும் கரோனா... பிரதமர் மோடி ஆலோசனை! - மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களிடம் ஆலோசனை
லக்னோ: வாரணாசியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (மே.21) காலை 11 மணியளவில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் மோடி
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டு முயற்சிகள் மூலம் தொடங்கப்பட்ட பண்டிட் ராஜன் மிஸ்ரா கோவிட் மருத்துவமனை உட்பட பல்வேறு கோவிட் மருத்துவமனைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதுமட்டுமின்றி, கரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.