வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் அவர்களை ஊக்குவிக்கவும் பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்படும்.
அந்த வகையில் 16ஆவது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, ஜனவரி 9ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த 16ஆவது மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைப்பார், வெளிவிவகார அமைச்சர் வி. முரளீதரன் நிகழ்ச்சி அரங்கேறும் இணையதளத்தை அறிமுகப்படுத்துவார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை கருத்தில்கொண்டு இந்த மாநாடானது காணொலி மூலம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் "ஆத்மனிர்பர் திட்டத்திற்குப் பங்களிப்பு" என்பதாகும்.
இதையும் படிங்க:இந்திய மொபைல் மாநாடு 2020: பிரதமர் மோடி தொடங்கிவைப்பு